Google

Custom Search

Ammachatram from Ahayam

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

அம்மாசத்திரம் கும்பாபிஷேக விழா காட்சிகள்

அம்மாசத்திரம் கும்பாபிஷேக விழா காட்சிகள் 18-21.01.2010



22.01.2010 கும்பாபிஷேக தின காட்சிகள்


22-01-2010 சப்தரிஷிஷ்வரர்-ஞானாம்பிகை திருக்கல்யாண வைபவம்.


ஐந்து நாள் காட்சிகளும் அரங்கேறி உள்ளன நிதானமாக கண்டு இறையருள் பெறவும்.

திங்கள், 18 ஜனவரி, 2010

கும்பாபிஷேகம் துவக்க நாள் 18-01-2010 திங்கள்

கும்பாபிஷேகம் துவக்க நாள் 18-01-2010 திங்கள்

நிகழ்ச்சி நிரல்:

5-ஆம் தேதி 18-01-2010 திங்கள்

காலை 7.00 மணி - 10.00 மணி வரை - அனுக்ஞை, வினாயகர் வழிபாடு கணபதிஹோமம் தனபூஜை பூர்ணாஹுதி தீபாராதனை

மாலை 5.00 மணிக்கு - பிரவேச பலி, ரக்ஷோக்ன ஹோமம், கிராமசாந்தி தீபாராதனை


6-ஆம் தேதி 19-01-2010 செவ்வாய்

காலை 7.00 மணிக்கு - காவிரியிலிருந்து புனித நீர் கொண்டு வருதல் நவக்ரஹ ஹோமம்
மாலை 6.00 மணிக்கு - வாஸ்து சாந்தி, மிருத்ஸ்ங்கிரகணம், அங்குரார்ப்பணம்

7-ஆம் தேதி 20-01-2010 புதன்

காலை 7.00 மணிக்கு - சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், சம்ஹிதா ஹோமம், பிரசன்னாபிஷேகம்
மாலை 5.00 மணிக்கு - ரக்ஷாபந்தனம், கும்பஸ்தாபனம், கலாகர்ஷணம்
இரவு 7.30 மணிக்கு - யாக சாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜை ஆரம்பம்
இரவு 7.30 மணிக்கு - பூர்ணாஹுதி தீபாராதனை

8-ஆம் தேதி 21-01-2010 வியாழன்


காலை 9.00 மணிக்கு - இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம்
காலை 10.00 மணிக்கு - பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகாமருந்து சாத்துதல்
பகல் 12.00 மணிக்கு - பூர்ணாஹுதி தீபாராதனை
மாலை 5.00 மணிக்கு - மூன்றாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம்
இரவு 7.00 மணிக்கு - சுவாசினி, கன்யா, பிரம்மச்சாரி பூஜைகள்
இரவு 8.00 மணிக்கு - பிரதான மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகாமருந்து சாத்துதல்
இரவு 9.30 மணிக்கு - பூர்ணாஹுதி தீபாராதனை

9-ஆம் தேதி 22-01-2010 வெள்ளி

காலை 6.00 மணிக்கு - நான்காம் கால யாகசாலை பூஜை நாடீசந்தானம், ஸ்பரிசாஹூதி
காலை 08.45 மணிக்கு
- பூர்ணாஹுதி தீபாராதனை
காலை 09.00 மணிக்கு - கடம் புறப்பாடு
காலை 09.45 மணிக்கு - ஸ்வாமி அம்பாள் விமான கலசங்கள், இராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமான கலசங்கள், மஹா கும்பாபிஷேகம்
காலை 10.15 மணிக்கு - மூலஸ்தான ஸ்வாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள், கொடிமரம் மஹா கும்பாபிஷேகம்
காலை 11.00 மணிக்கு - பிரசாதம் வழங்குதல்
பகல் 12.30 மணிக்கு - மஹாபிஷேகம்
மாலை 6.00 மணிக்கு - ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்

வியாழன், 14 ஜனவரி, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்

உலக தமிழர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் மற்றும் மகர சங்கராந்தி வாழ்த்துக்கள்.




பொங்கிடும் மங்களம் எங்கெங்கும் தங்கிட,
ஆனந்தமாய் பொங்கும் பால் அனைவருக்கும்
ஆனந்தத்தை தந்திட
அவனியில் வரும் தைமகளே! உன் வரவு நல்வரவு ஆகுக!
அனைவருக்கும் இனிக்கும் கரும்பின்,
தித்திக்கும் சர்க்கரைப் பொங்கலின் சுவை போன்ற
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

திங்கள், 11 ஜனவரி, 2010

ஸ்ரீ சப்தரிஷிஷ்வரர் காப்பு கவசம்

ஸ்ரீ சப்தரிஷிஷ்வரர் காப்பு கவசம்

காப்பு
நினைப்போர்க்கு ஊழ்வினைபோய் துன்பம் போய்
நெஞ்சிற் பதிப்போர்க்கு இன்பம் பதித்து கதித்தோங்கும்
ஞானமும் கைகூடும் ஞானாம்பிகை நாதரின் கவசந்தனை
நாளும் உரைப்போர்க்கு நன்மை நல்கும் சப்தரிஷிஷ்வரர் பாதமே துணை.

கவசம்
ஓம் எனும் வடிவே உண்மையின் உருவே
வேதத்தின் பொருளே வித்தகத் தருவே
காலத்தின் அளவே கருணையின் கடலே
மூலத்தின் முதலே மூஷிக வாகனா

அக இருள் நீக்கி அன்பினை அளிக்கும்
ஆண்டவனே என் சிவ பெருமானே
ஆரியர் சூரியர் அனைவரும் வணங்கும்
ஆதி நாதனே சிவ பெருமானே

வேதப் பொருளே விளங்கு பொன்முடியே
சீதக் கனலே செஞ்சுடரோனெ
ஒத நினைப்போர் உள்ளத்தொளியே
ஆனந்த வடிவே அழகிய உருவே

எங்கும் நிறைந்த இறைவா வருக
பைரவபுரத்தின் தலைவா வருக
இம்மைக்கும் மறுமைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
நன்மையை நல்கும் நாயகா வருக

சப்தரிஷிஷ்வரா வருக வருக
சதுரகிரிஷ்வரா வருக வருக
சுந்தரலிங்கமே வருக வருக
சுகம் மிக அருள விரைவாய் வருக

பிறப்பை அறுத்து பேரின்பம் தந்து
சிறப்பை நல்க சீக்கிரம் வருக
விருப்பு வெறுப்பு யாவும் இன்றி
பொறுப்பை நல்க பொலிவுடன் வருக

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியும்
நாகாபரணமும் கொன்றை மாலையும்
சூடிய எந்தன் சுந்தர வதனா

ஆங்கிரஸர் புலஸ்தியர் வசிஷ்ட மாமுனியும்
அத்ரி மரீசி பரத்வாஜருடன்
பிருகு எனும் சப்தரிஷிகள்
வணங்கிய சப்தரிஷிஷ்வரர் நாமம் வாழ்க

ஞானம் வழங்கும் ஞானாம்பிகையே
பஞ்சசக்திக்கு அருளிய திருவே
பாரில் பலவித நன்மைகள் அருள
பார்வதியே நின் பதமலர் தருக

சப்தரிஷிகள் வணங்கிய நாதா
சகல புவன சற்குண நாதா
சீரருள் நல்கும் சிவபெருமானெ நின்
சீரடி பணிந்தேன் சிறப்புடன் காப்பாய்

முருகா முத்துக்குமரா வேலா
முனிவர்கள் போற்றும் உமையின் பாலா
வள்ளி தெய்வானை மனம்கவர் சீலா
வரம் பல அருள உடனே வாராய்

திருவருள் தந்து திவ்யமாய் வாழ
குருபகவானே குறைகள் களைவாய்.
அனைவர்க்கும் நாளும் அறிவுரை வழங்கும்
திருவே உருவே தினமும் பணிந்தேன்

காசிக்கு நிகராய் அருள்தனை வழங்கும்
காலபைரவா நினதருள் பெறவே
காலையில் மாலையில் கனிவாய் உந்தன்
நாமமே நினைத்தோம் நாங்களும் தொழுதோம்

சகல நன்மைகள் அருளும் இறைவா
என்றும் எங்கும் நிந்தன் நாமம்
மறவா வரத்தினை நல்கவும் வேண்டி
மகிழ்வுடன் நிந்தன் சன்னதியடைந்தோம்.

சிதம்பர நாதனே சிரசினை காக்க
நெல்லையப்பரே நெற்றியை காக்க
திருவீழிநாதரே விழியினை காக்க
நாகேஸ்வரரே நாசியை காக்க

செஞ்சடையோனே செவியினை காக்க
நமசிவாயனே நாவினை காக்க
முக்கண்ணனே என் முகத்தினை காக்க
எக்கணமும் எனை எழிலுடன் காக்க

தேனுபுரிஸ்வரர் தோள்களை காக்க
கைலயம்பதியன் கரங்களை காக்க
மகாலிங்கனே மார்பினை காக்க
வாயுலிங்கனே வயிற்றினை காக்க

கோடீஸ்வரரே கொடியிடை காக்க
காளஹஸ்தீஸ்வரர் கால்களை காக்க
அங்கம் யாவிலும் இன்னல்கள் அகற்றி
சங்கம் வளர்த்த சிவனார் காக்க

பாவங்கள் நீக்கி பயத்தினை போக்கி
பரமேஸ்வரனே செழுமையாய் காக்க
சக்தியை கொடுத்து முக்தியை அளிக்க
முக்தீஸ்வரரே விரைந்தென்னை காக்க

காக்க காக்க கருணா சாகரா
நோக்க நோக்க நொடிப்பொழுதிலும் எனை
தாக்க தாக்க தடையற தாக்க
பார்க்க பார்க்க பாவங்கள் விலக்க

எல்லா இன்னலும் எளிமையாய் அகல
பொல்லா வினைகள் பொடியென விலக
எந்தையாய் எந்தன் சிந்தையில் இருந்து
வாழும் வழியினை வளமுடன் நல்க

வானாய் மண்ணாய் வளியாய் ஒளியாய்
ஊனாய் உயிராய் உண்மையாய் இன்மையாய்
யாவிலும் நிறைந்த சிவபெருமானெ
சீலமாய் வாழ சீரருள் புரிவாய்

சப்தரிஷிஷ்வரா சரணம் புகுந்தேன்
சாந்தமும் அமைதியும் தந்திடுவாயே
சாதிக்க நினைக்கும் பக்தருக்கெல்லாம்
சகல நன்மைகள் அளித்திடுவாயே

சப்தரிஷிஷ்வரா சரணம் சரணம்
ஞானாம்பிகையே சரணம் சரணம்
கணபதியே நின் பாதம் சரணம்
வேலவனே நின் தாளடி சரணம்
தக்ஷ்ணாமூர்த்தியின் தாள்கள் சரணம்
பஞ்சசக்திகள் பாதம் சரணம்
மகாலக்ஷ்மியின் மலரடி சரணம்
காலபைரவரின் கழலடி சரணம்
சரணம் சரணம் சிவாய நம ஓம்
சரணம் சரணம் சிவாய நம ஓம்
சரணம் சரணம் சிவாய நம ஓம்
சரணம் சரணம் சிவாய நம ஓம்………………

புதன், 6 ஜனவரி, 2010

Ammachatram Temple


Ammachatram Temple

About Ammachatram:

Ammachatram is an ancient village prescribed in "Bavishyotta puranam" as "Bairavapuram" after some period it was called as "Sakkuvambalpuram" or "Ammani Ammal Chatiram", Presently pronounced as Ammachatiram in Tamil.

About Temple:

The 1500 Years old temple is familiared for its Kalabairavar stalam on its Ancient Shiva temple. The lord Name is Saptharishiswarar and Deities name is Gnanambikai, Five Lingams (including moolavar), Vinayakar, Dhakshnamurthi, Murugan, Mahalakshmi, Lingothbavar,Vishnu, Durga, Chandikeshwarar, Kalabairavar, Saneeswarar, Suriyan, Chandiran, etc. The temple has two stala vritchams one is Vilva tree and another one is Jackfruit tree. The temple was built by Chola Kings and still maintaned by Thanjavur Palace.

The Full moon Ashtami pooja for Kalabairavar is very familiar for its great power of solving the problems and giving remedies to life. Presently the temple is under renovation and looking for its Maha Kumbabishekam very soon.

Saptharishsis were prayed this Lord and they arranged the marriage for this Moolavar thats why the Lord name is called Saptharishiswarar and the deity name is Gnanambikai will give the brilliance and stability to withstand the karmas in life. In Bavishyaotta Purana this place is mentioned as a Sin releif place as like as Kasi (Varanasi) because of the Kalabairavar who is blessing here will give protection from all the eight directions.

அம்மாசத்திரம் ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் திருத்தலம்

அமைவிடம்:

சோழ வள நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் தக்ஷ்ண கங்கை என புகழ் பெற்ற காவேரி நதியின் தென்புறத்தில் அமைந்துள்ளது அம்மாசத்திரம் கிராமம். கோவில் நகரமாம் குடந்தை மாநகரின் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு கிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் சித்த பிரமை போக்கும் திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு மேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருத்தலம் .

பெயர் காரணம்:

இவ்வூரின் மகிமை பவிஷ்யோத்த புராணத்தில் பைரவபுரம் என்றழைக்கப்பட்டு பிறகு சக்குவாம்பாள்புரம் எனவும் பின்னர் அம்மணி அம்மாள்சத்திரம் எனவும் அழைக்கப்பட்டு பின்னர் மறுவி அம்மாசத்திரம் என அழைக்கப்பட்டு வருகிறது.

காலம்:

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிக பழமையும் பெருமையும் வாய்ந்த இத்திருத்தலம் மராட்டிய மன்னர் சரபோஜி மஹாராஜா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட தர்ம நிலங்களில் ஒன்றாகிய சக்குவாம்பாள்புரம் எனும் அம்மாசத்திரத்தில் உள்ளது.

கோவிலின் சிறப்பு:

இக்கோவிலில் சப்தரிஷிகள் மூலவரை பூஜித்து உள்ளதால் சப்தரிஷிஷ்வரர் என்று இறைவன் திருநாமம் பெற்றுள்ளார். இறைவியின் பெயர் ஞானாம்பிகை ஆகும். ஸ்தல விருட்சம் பலா மரம் மற்றும் வில்வ மரம் ஆகும். இத்திருத்தலத்தில் முக்கியமாக பைரவ தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீகாலபைரவரை வணங்கினால் பிதுர் தோஷத்திலிருந்து விடுபடுவார்கள். மேலும் விநாயகர், முருகன், தக்ஷ்ணாமூர்த்தி, துர்க்கை, லிங்கோத்பவர், விஷ்ணு, சனீஷ்வரர், சூரியன், சந்திரன், நாகர் ஆகிய அனைத்து தெய்வங்களும் சுற்று பிரகாரங்களில் இனிதே அருள்பாலிக்கும் திருத்தலம்.



கோவிலின் அமைப்பு:

கோவிலின் தெற்கு வாயில் நம்மை சாலையிலிருந்து வரவேற்க பிரதான வாயில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. வினாயகருடனான த்வஜ ஸ்தம்ப பீடம் நம்மை ஆசீர்வதிக்க வரவேற்க பிரதோஷ புகழ் நந்தி கம்பீரமாக நின்று சப்தரிஷிஷ்வரரை அணுக நமக்கு அனுமதி அளிக்கின்றார். சற்று முன்னேறிச் செல்ல ஞானத்தை அள்ளி வழங்கும் ஞானாம்பிகை தாயார் சிவன் சன்னதிக்கு செல்லும் வழியின் வலப்பக்கத்தில் இருந்து தென் திசை நோக்கி சாலை வழியாக உள் நுழையும் பக்தர்களுக்கு உள்ளார்ந்த அன்புடன் அருள் பாலிக்கின்றார். மேலே சென்று சிவபெருமானை வழிபட மனதில் ஏகாந்த ஆனந்தம் ததும்புகின்றது. சிவ லிங்கத்தின் இடப்புறத்தில் சிவ பெருமான் நடராஜராய் நின்று அருள் பொழிகின்றார்.

பிரகார வலம் வரும்போது விக்னங்களை விநாசனம் செய்யும் விக்ன தென் திசையில் விநாயகர், தக்ஷ்ணாமூர்த்தி, மாடங்களில் சனீஸ்வரர், சப்த ரிஷிகள் மற்றும் நால்வர் திகழ, மேல் திசையில் லிங்கோத்பவர் மற்றும் மாட மேடைகளில் விநாயகர், மூன்று லிங்கங்கள், சண்முகப் பெருமான், கெஜலெக்ஷ்மி தாயார், வட திசையில், விஷ்ணு, துர்க்கை, சண்டிகேஷ்வரர் மற்றும் கீழ்திசையில் ஒரு லிங்க பெருமான், காலபைரவர், சூரிய, சந்திர, மற்றும் நாகர் சன்னதியுடன் விளங்குகின்றது.


திருக்கோவிலின் சிறப்புமிக்க அம்சங்கள்:

• சப்தரிஷிகள் சிவபெருமானுக்கு திருமணம் பேசி முடித்த திருத்தலம்.
• பஞ்சலிங்கங்கள் மற்றும் பஞ்சசக்திகள் அருள்பாலிக்கும் திருத்தலம்
• நவகிரஹ இயந்திர மண்டலம் விளங்குவது ஆகியவை ஒரே கோவிலில் அமைந்திருப்பது என்பது இத்திருத்தலத்தின் சிறப்பு.


ஸ்ரீகாலபைரவர்:

காசியை காலபைரவர் ஸ்தலம் என்பார்கள். காசியில் வாழ்பவர்களுக்கு எமவாதனை கிடையாது ஆனால் பைரவர் தண்டனை உண்டு. ஏனென்றால் காசியை எட்டு திக்குகளிலிருந்தும் எட்டு விதமான பைரவர் இருந்து காவல் காப்பதாக ஐதீகம். இதனாலேயே காசி பைரவஷேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது.

காசியைப் போலவே கும்பகோணத்திலும் எட்டு திசைகளிலும் எட்டு விதமான பைரவர் இருந்து காவல் காப்பதாக ஐதீகம். அதனால் தான் அம்மாசத்திரம் பைரவஷேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது. இப்படி பலவகைகளில் அம்மாசத்திரமும் காசியும் முக்கியத்துவம் பெறுகின்றது. அதிலும் காசியில் உள்ளவர் பாவங்களை போக்கும் சக்தி கங்கைக்கு இல்லை. இந்த சக்தி அம்மாசத்திரத்திற்கு உண்டு என பவிஷ்யோத்த புராணம் கூறுகிறது.

இத்திருக்கோவிலில் உள்ள காலபைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பது வேறு எங்கும் இல்லாத விசேஷ அம்சமாகும். இங்குள்ள ஸ்வாமி அஷ்டபைரவ ரூபியாக இருந்து கும்பகோணத்தை காவல் காப்பதாக சம்பிரதாயம் உண்டு.

இங்கு உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் சனி தோஷம், பிதுர் தோஷம், நவகிரஹ தோஷம், திருமணத்தடை ஆகியவை நிவர்த்தி ஆகும் என நம்பப்படுகிறது.

விசேஷ சிறப்பு பூஜைகள்:
• ஞாயிறு தோறும் ராகு காலங்களில்
• தேய்பிறை அஷ்டமி தினங்களில்
• பிரதோஷ வழிபாடு

தமிழ் எண்களுடன் கூடிய நவகிரஹ சக்கர கல்வெட்டு:

இந்த சிவாலயத்தின் அம்மன் முன்புள்ள மண்டபத்தின் உட்புற விதானத்தில், கூறையில் 12 ராசிகளின் உருவங்கள் சிற்பங்களக பொறிக்கப் பெற்றதோடு நடுவில் பக்கத்திற்கு ஒன்பது கட்டம் எனும் அமைப்பில் கட்டங்களுடன் நவகிரஹ சக்கரம் கல்வெட்டுக்களாக அமைக்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களில் தமிழ் எண்கள் இலக்கமாகப் பொறிக்கப்பெற்றுள்ளது. எந்த வரிசை கட்ட்த்தில் எண்களை கூட்டினானும் 45 என்ற எண்ணிக்கை வரும். இதன் (4+5) கூட்டு தொகை 9 ஆகும். இது ஒன்பது ராசிகளின் அதிபதிகளை குறிப்பதாகும். பொதுவாக 45 என்று வருமாறு இது போன்ற எண்கள் உள்ள சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு, மற்றும் கேது ஆகிய கிரஹங்களின் சக்கரங்களை ஜோதிட நூல்கள் கூறுகின்றன. பன்னிரண்டு ராசிகளையும் உள்ளடக்கிய தமிழ் எண்கள் கொண்ட ஒரெ நவக்கிரஹச் சக்கரம் கல்வெட்டாகப் பொறிக்கப்பெற்றுள்ளது வேறு எங்கும் காண இயலாத தனிச் சிறப்பாகும்.