Google

Custom Search

Ammachatram from Ahayam

சனி, 5 பிப்ரவரி, 2011

அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஒராண்டு நிறைவு விழா 08/02/2011

அருள்மிகு ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் திருக்கோவில் (காலபைரவர் ஷேத்திரம்)கும்பாபிஷேகம் ஒராண்டு நிறைவு விழா நாளது 08/02/2011 அன்று நடைபெற உள்ளதால் பக்தகோடிகள் அனைவரும் வந்து சிறப்பு ஆராதனை செய்து இறைவனை வழிபட்டு அருள் பெற அழைக்கின்றோம்.

அம்மாசத்திரம் ஸ்ரீ பெத்தாண்டவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் 07/02/2011

அம்மாசத்திரம் ஸ்ரீ பெத்தாண்டவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் 07/02/2011 அன்று காலை விமரிசையாக நடைபெற உள்ளதால் பக்த கோடிகள் அனைவரும் வந்து இறையருள் பெற வரவேற்கின்றோம்.யாக பூஜைகள் நாளை ஆரம்பமாக உள்ளது.

வெளியூரிலிருந்து வருபவர்களாயின் அருகிலிருக்கும் அருள்மிகு காலபைரவர் புகழ் ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் ஆலயத்தையும் வழிபட்டு அருள் பெற பணிக்கிறோம்.

அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 07/02/2011

அம்மாசத்திரம் முத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் 07/02/2011 அன்று காலை விமரிசையாக நடைபெற உள்ளதால் பக்த கோடிகள் அனைவரும் வந்து இறையருள் பெற வரவேற்கின்றோம்.யாக பூஜைகள் ஆரம்பமாகி விட்டது.

வெளியூரிலிருந்து வருபவர்களாயின் அருகிலிருக்கும் அருள்மிகு காலபைரவர் புகழ் ஞானாம்பிகை சமேத சப்தரிஷிஸ்வரர் ஆலயத்தையும் வழிபட்டு அருள் பெற பணிக்கிறோம்.

சனி, 4 செப்டம்பர், 2010

Govindapuram Gokulashtami Live Webcast 2010 Uriyadi Utsav - 04-09-2010

Govindapuram Gokulashtami Live Webcast 2010 Uriyadi Utsav - 04-09-2010

Govindapuram is a small nice devotional village very near to Ammachatram on the way to Mayiladuthurai from Kumbakonam.The Gokulashtami Utsav which has been held on 04-09-2010 in Vittaldas Panduranga Bhajanshram.Hope most of the portions of Uriyadi Utsav covered for the devotees.Glad to present and Please write your comments.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

2010 முக்கிய தினங்கள் - 2010 Important Days.

http://www.tamildailycalendar.com/ashtami.php?msg=Ashtami%202010

2010 Ashtami Days - 2010 அஷ்டமி தினங்கள்.

Ashtami dates in January 2010:

January 8, 2010 தேய்பிறை அஷ்டமி
January 23, 2010 – Bhishmashtami (Shani Ashtami)

Ashtami dates in February 2010:

February 6, 2010 (Shani Ashtami)தேய்பிறை அஷ்டமி
February 22, 2010

Astami March 2010 dates:

March 8, 2010 – Sheetalashtami or Sheetala Ashtami தேய்பிறை அஷ்டமி
March 23, 2010 – Durgashtami during Chaitra Navratri or Ashokashtami in Orissa

Astami dates in April 2010:

April 7, 2010 தேய்பிறை அஷ்டமி
April 22, 2010

Ashtami May 2010 dates:

May 6, 2010 தேய்பிறை அஷ்டமி
May 21, 2010

Astami June 2010 dates:

June 5, 2010 (Shani Ashtami)தேய்பிறை அஷ்டமி
June 19, 2010 (Shani Ashtami)

Ashtami July 2010 dates:

July 4, 2010 தேய்பிறை அஷ்டமி
July 19, 2010

Ashtami August 2010 dates:

August 3, 2010 தேய்பிறை அஷ்டமி
August 17, 2010

Astami September 2010 dates:

September 1, 2010 – Krishnashtami 2010 or Janmashtami (Krishna Janmashtami for Smarta people)தேய்பிறை அஷ்டமி
September 2, 2010 – Gokulashtami 2010 (Janmashtami for Vaishnava sect)
September 15, 2010

Ashtami October 2010 dates:

October 1, 2010 தேய்பிறை அஷ்டமி
October 15, 2010 – Durgashtami 2010
October 30, 2010 – Ahoi Ashtami 2010 (Shani Ashtami) தேய்பிறை அஷ்டமி

Ashtami November 2010 dates:

November 14, 2010 – Gopashtami 2010
November 29, 2010 – Kala Bhairavashtami 2010 or Mahakal Bhairav Jayanti தேய்பிறை அஷ்டமி

Astami December 2010 dates:
December 13, 2010
December 28, 2010 தேய்பிறை அஷ்டமி

Bhishmashtami, Chaitra Durgashtami or Ashokashtami, Krishnashtami or Gokulashtami or Janmashtami, Gopashtami, Sheetalashtami, Ahoi Ashtami, Jyeshtashtami, Kalabhairavashtami or Mahakal Bhairo Astami are some festivals celebrated on Ashtami days. Ashtami which falls on Shanivar or Saturdasy is also considered auspicious.

வெள்ளி, 11 ஜூன், 2010

Kalabiarava Ashtami Pooja - Ammachatram 07.04.2010 - காலபைரவ தேய்பிறை அஷ்டமி ஹோமம் மற்றும் பூஜைகள்.

காலபைரவ தேய்பிறை அஷ்டமி ஹோமம் மற்றும் பூஜைகள்.
Kalabairava Ashtami Pooja - Ammachatram 07.04.2010



ஸ்ரீ பைரவர் வரலாறு


எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் 'பைரவர்' என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது.
படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே அனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவரக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கிறார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எவ்விதமான பூசைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோசத்துடன் உடனே செயல் பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காபாற்றுவார்.




நவ கிரக பைரவர்களும் உப சக்திகளும்

நவ கிரகங்கள் பிராணபைரவர் பைரவரின் உப சக்தி
சூரியன் ஸ்வர்ணா கர்ஷன பைரவர் பைரவி
சந்திரன் கபால பைரவர் இந்திராணி
செவ்வாய் சண்ட பைரவர் கௌமாரி
புதன் உன்மத்த பைரவர் வராகி
குரு அசிதாங்க பைரவர் பிராமகி
சுக்கிரன் ருரு பைரவர் மகேஸ்வரி
சனி க்ரோதனபைரவர் வைஷ்ணவி
ராகு சம்கார பைரவர் சண்டிகை
கேது பீஷ்ண பைரவர் சாமுண்டி

பைரவர் வழிபாடு கைமேல் பலன்
ஒம் ஸ்ரீ கால பைரவாய நமஹ:

தினமும் 11முறை பாராயணம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும் !!!!
தியானம்

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

பைரவ காயத்ரி:

ஒம் ஷ்வானத் வஜாய வித்மகே !
சூல ஹஸ்தாய தீமகீ !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

ஒம் காலத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் :

ஞாயிற்றுகிழமை தள்ளிபோகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் ராகு காலத்தில் மாலை நான்கரை மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஸ்ரீ பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிசேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிபவர்கள் ராகு காலத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நெய்வேத்தியம் இட்டு வழிபாட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

ஸ்ரீ கால பைரவர்

காசி கோவிலில் பைரவர் தான் ப்ரதாநமாதக்கருதப்பட்டு வணங்கப்படுகிறார் அம்மாசத்திரம் கோவிலுக்கும் இப்பெருமை உரியதாகின்றது. சநீஷ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சனீஷ்வரன், சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியபடுத்தப்பட்டு கௌரவக் குறையை அடைந்தார் . அவருடைய தாய் சாயா தேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபாட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சநீஷ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார்.

சனீஸ்வரரின் குருநாதர் பைரவர். காசியில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட சனீஸ்வரன், காசியின் காவல் தெய்வமான பைரவரை எண்ணி தவம் புரிந்து பிறகு மெய்ஞானம் பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன. பைரவரின் 64 அம்சங்களில் எட்டு அம்சங்கள் விசேஷம். கால பைரவருக்கு திரிசூலம் ஆயுதம். காசியில் காலபைரவரையும், சிதம்பரத்தில் சொர்ண பைரவரையும் தரிசித்தால் சிறப்பு. கலையை ஆட்டுவிக்கும் கடவுளாக கருதப்படும் காலபைரவர் பிரம்மனின் தலையை தன் நகத்தால் கிள்ளி எறிந்து தன் திருவிளையாடலை நடத்தியவர். இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவர் எதிரி பயம் நீக்கி மன நிம்மதியை தந்தருள்கிறார்.